ETV Bharat / state

'பொள்ளாச்சியில் தேர்தல் விதி மீறிய அதிமுக வேட்பாளர்'

author img

By

Published : Dec 23, 2019, 7:39 PM IST

Updated : Dec 23, 2019, 8:02 PM IST

கோவை: பொள்ளாச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர் விதிமீறி செயல்படுவதாக பெண் ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாட்சியில் தேர்தல் விதிமீறிய அதிமுக வேட்பாளர்
பொள்ளாட்சியில் தேர்தல் விதிமீறிய அதிமுக வேட்பாளர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் கள்ளிப்பட்டி கிராமத்தில் மட்டும் 850 வாக்குகள் உள்ளன. இங்கு ஊராட்சித் தலைவர் பதவிக்காக அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுகவைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், தேர்தல் பரப்புரைக்காக வீடுகளின் கதவுகள், தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ சின்னம் பதிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். இந்த ஸ்டிக்கரானது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒட்டி உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாட்சியில் தேர்தல் விதிமீறிய அதிமுக வேட்பாளர்

இதுகுறித்து அவர் கூறும்போது, "அதிமுக வேட்பாளர் திருவேங்கடம் தேர்தல் விதிமீறி செயல்படுவதாக நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். இதுபோன்ற தேர்தலில் விதிமுறை மீறும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், "உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு கறி விருந்து கொடுத்து வருகிறார்கள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட் அச்சுறுத்தலுள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு - எஸ்.பி தகவல்

Intro:sticker issueBody:sticker issueConclusion:பொள்ளாச்சி அடுத்த கள்ளிப்பட்டி கிராமத் தில் ஸ்டிக்கர் அடித்து தேர்தல் பரப்புரை, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் தேர்தல் விதிமீறிய அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் புகார் பொள்ளாச்சி 23 பொள்ளாச்சி அடுத்த வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன இது கள்ளிப்பட்டி கிராமத்தில் மட்டும் 8 50 வாக்குகள் உள்ளது இங்கு ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்காக அதிமுக திமுக என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர், இதில் அதிமுகவைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார் இவர் பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக வீடுகளின் கதவுகள் மற்றும் தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திருவேங்கடத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ சின்னம் பதிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார் இது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒட்டு உள்ளதாக அப்பகுதி சேர்ந்த பிரியா என்பவர் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார் ஆனால் தேர்தல் ஆணையம் அது கண்டுகொள்ளவில்லை எனவும் இதுபோன்ற தேர்தலில் விதிமுறை மீறும் சிலர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற வேட்பாளர்களுக்கு இவர் ஒரு தவறான எடுத்துக்காட்டாக ஆகிவிடுவார் என்றும் அதுமட்டுமல்லாது இந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்களுக்கு கறிவிருந்து உள்ளிட்டவற்றை கொடுத்து வருகிறார்கள் இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக அளிப்பதாக தெரிவித்தார் மேலும் தங்கள் ஊர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பொதுமக்கள் சார்பில் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்- பேட்டி-பிரியா (கள்ளிப்பட்டி)
Last Updated : Dec 23, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.