ஆனைமலையை அடுத்த சர்க்கார்பதி பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் காட்டிலிருந்து பட்டா நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திவருகின்றன.
இந்நிலையில், சர்க்கார்பதி-காண்டூர் கால்வாயை ஒட்டிய உசேன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நேற்று இரு காட்டு யானைகள் புகுந்தன.
அங்கு காய்கறிகள் பயிரிட அமைக்கப்பட்டிருந்த பந்தலை அவை உடைத்து சேதப்படுத்தின. தோட்டத்தில் இருந்தவர்கள் காட்டு யானைகள் புகுந்தது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதன்பின்பு, அங்குவந்த வனத் துறையினர் யானைகளைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது, திடீரென மூர்க்கமடைந்த காட்டு யானைகள் ஜீப்பையும் சேதப்படுத்தின. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனத் துறையினர் இரு காட்டு யானைகளையும் வனத்திற்குள் விரட்டினர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களை துரத்தும் யானைகள்!