கோவை: காரமடை புங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், நவநீதகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை இவருடைய வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை காட்டு யானைகள், கீழே தள்ளிவிட்டு வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே இருந்த சோளமாவு மூட்டையை கீழே தள்ளி சாப்பிட்டுள்ளது.
யானை வீட்டில் புகுந்து இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியும், சோள மாவை எடுத்து தின்னும் சிசிடிவி வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே அப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.