கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நாட்டுக்கல் பாளையத்தில் சிவக்குமார் என்பவரது 40 அடி கிணற்றில் காட்டு மான் ஒன்று விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிவக்குமார் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்திரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நாட்டுக்கல் பாளையத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறக்கி சுமார் 4 மணி நேரமாக போராடிய மானை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட மான் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வன பகுதியில் விடப்படும் என துணை கள இயக்குநர் தெரிவித்தார்.