ETV Bharat / state

பதவியை காப்பாற்ற தவறு செய்த அமைச்சர்களை முதலமைச்சர் பாதுகாக்கிறார் - கனிமொழி - pollachi-sex-case

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது என திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார்?

author img

By

Published : Jan 10, 2021, 9:35 PM IST

Updated : Jan 10, 2021, 9:48 PM IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது என்றும் அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகி கைதுடன் முடித்து விடக் கூடாது. இதில் தொடர்புள்ள அதிமுக மேல்மட்டத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிரணி மாநில செயலாளர் தலைமையில் ஜன.10 காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாவட்ட தோறும் பெண்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து திமுக சார்பாக நடைபெற போராட்டம்

இதனையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் பொள்ளாச்சியில் இன்று (ஜன.10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோவை தெற்கு மாவட்ட திமுக, திமுக மகளிர் அணி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் காந்தி சிலை அருகே நடைபெற்றது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது

இக்கூட்டத்தில் பேசிய அவர், "கோவையில் இருந்து வரும் பொழுது எனது வாகனம், தொண்டர்கள் வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க விடாமல் தடுக்க முயற்சி செய்தனர், பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடுமையை வெளியே வந்து சொன்னதின் பேரில் இச்சம்பவம் வெளியே தெரியவந்தது.

பெண்களுக்கு தனி நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார்?

முதலமைச்சர் ஆதாரம் இருந்தால் தாருங்கள் என கூறுகிறார், தற்பொழுது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், கிரோன்பால், பைக் பாபு மூவரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கம் உள்ளவர்கள். அருளானந்தத்தை காப்பாற்ற அல்ல முக்கிய பிரமுகர்களை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இச்சம்பவத்தால் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் (சட்டப்பேரவைத் துணை சபாநாயகர்) தொகுதி மாற உள்ளார். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் கொடூரம் தொடர்ந்து நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாவட்ட தோறும் பெண்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

பதவியை காப்பாற்ற தவறு செய்த அமைச்சர்களை முதலமைச்சர் பாதுகாக்கிறார் - கனிமொழி

தமிழ்நாட்டை டெல்லிக்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துள்ளார். அதுமட்டுமல்ல தனது பதவியை காப்பாற்ற, தவறு செய்யும் அமைச்சர்களையும், அவர்களின் உறவுகளையும் பாதுகாக்கிறார். நிச்சயமாக அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு பாடம் கற்பிக்கப்படும்" என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாவட்ட தோறும் பெண்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, கோவை எம்எல்ஏ கார்த்திகேயன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மடத்துக்குளம் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் நித்திய ஆனந்தம், மதிமுக மாவட்டச் செயலாளர் குகன் மில் செந்தில், நகர செயலாளர் டாக்டர் வரதராஜன், வால்பாறை முன்னாள் நகர செயலாளர் கோழிக்கடை கணேஷ், நகர துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சபரி கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் துரை, தேவசேனாதிபதி, கிரி கதிர் வேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'திமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாட்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படும்'

Last Updated : Jan 10, 2021, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.