ETV Bharat / state

கோவையில் இஸ்லாமியர்களின் மயானத்துக்கு செல்லும் பாதை அடைப்பு: அலுவலர்கள் விளக்கம் - islam cemetery

கோவை : இஸ்லாமியர்களது மயானத்திற்கு செல்லும் பாதை வனத்துறையினரால் அடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்லாமியர்கள் மயானம் செல்லும் பாதை அடைத்த வனத்துறையினர்

author img

By

Published : Jun 8, 2021, 9:44 PM IST

கோவை: தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட மைல்கல் எனும் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கபர்ஸ்தான் எனும் இஸ்லாமியர்களின் மயானம் உள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன்.08) காலை அப்பாதையில் பெரிய கற்கள் போடப்பட்டு தடை செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து இஸ்லாமியர்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த அலுவலர்கள் இது குறித்து விசாரித்தபோது, அது வனத்துறைக்கு உள்பட்ட இடம் என்பதால் வனத்துறையினர் அந்தப் பாதையை அடைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இரவோடு இரவாக ஏராளமான கற்களை அப்பாதையில் போட்டு வனத்துறையினர் வழியை அடைத்ததும் தெரிய வந்தது.

சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்த இந்த கபர்ஸ்தானில் கரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய இந்தப் பாதை பயன்படுத்தப்பட்டு வந்தது. கபர்ஸ்தானுக்கு செல்லும் பாதையை சரி செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் மாநகராட்சி அலுவலர்களிடம் முன்னதாக வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ’மைல்கல் பகுதியில் உள்ள கபர்ஸ்தான் செல்வதற்கு மாற்றுப் பாதை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் இந்த வழியை பயன்படுத்துவதால்தான் இப்பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது. ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் வழித்தடம் ஏற்படுத்தி அதை பயன்படுத்துவதால், இந்த வழித்தடத்தை அருகில் உள்ள குவாரி வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றன.

எனவே தான், வனத்துறைக்கு சொந்தமான இடத்தை குவாரியைச் சேர்ந்த லாரிகள் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள மாற்றுப் பாதையில் உடல்களை கபர்ஸ்தான் கொண்டு செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. வனத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் இது குறித்து பேசி வருகின்றனர்’ என்றார்.

இதையும் படிங்க: பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.