ETV Bharat / state

லியோ படம் பார்ப்பேன்.. ஆனால் ஒரு விஷயம் இருக்கனு.. வானதி சீனிவாசன் ஒபன் டாக்! - விஸ்வகர்மா யோஜனா திட்டம்

Vanathi srinivasan: பிரதமர் மோடியை தலைவராக ஏற்றுக் கொள்ளும் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் எனவும் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் எனவும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை தலைவராக ஏற்றுக் கொள்ளும் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 9:22 PM IST

பிரதமர் மோடியை தலைவராக ஏற்றுக் கொள்ளும் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்

கோயம்புத்தூர்: கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் பதிவு செய்யும் நிகழ்ச்சியை திரிபுரா மாநில முன்னாள் முதல்வரும் விஸ்வகர்மா பி.எம் யோஜனா திட்டத்தின் தேசிய பொறுப்பாளருமான பிப்ளப் குமார் மற்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், ஐந்து சதவீதத்திற்கும் கீழ் பாஜக வாக்குகள் இருந்த திரிபுரா மாநிலத்தில் பாஜகவை ஆளும் கட்சியாக மாற்றியவர் பிப்ளப் குமார் என கூறினார். மேலும், ஒரு காலத்தில் பாஜகவுக்கு இந்த பகுதியில் மிகப்பெரிய ஆதரவு கொடுத்தவர்கள் பொற்கொல்லர் சமுதாயம் தான் எனவும், இந்த முறை இங்கு வெல்ல பெரும் பங்கு கொடுத்த சமுதாயங்களில் பொற்கொல்லர்களும் முக்கியமானவர்கள் எனவும் தெரிவித்தார். எந்த திட்டம் வந்தாலும் நம் தொகுதி மக்களுக்கு முதலில் செய்து தருவோம்.

தொழிலில் இருந்து மக்கள் சிறிது சிறிதாக விலகி செல்கிறார்கள், ஆகையால் அவர்களுக்கு காலத்திற்கேற்ப மேம்படுத்திக்கொள்ள இலவச பயிற்சி அளிக்க பிரதமர் இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார் எனவும் கூறியுள்ளார். கோடிகணக்கான மக்களுக்கு இந்த கடனுக்கெல்லாம் நான் கேரண்டி கொடுக்கிறேன் என பிரதமர் மோடி கூறுகிறார், தகுதி வாய்ந்த ஒரு நபர் கூட விடுபட கூடாது என விஸ்வகர்மாக தலைவர்களுக்கு கோரிக்கை வைப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்ளப் குமார், தனது வலது கையாக ஜான்சி ராணி லட்சுமி பாய் வானதி சீனிவாசன் உள்ளார். தமிழ்நாட்டின் முதல் தேசிய மகிளரணி தலைவர் வானதி சீனிவாசன், மிகவும் பிரபலமான நடிகர் கமல்ஹாசனை வீழ்த்துவது சாதாரணமான விஷயம் அல்ல எனவும் புகழாரம் சூட்டினார். மேலும் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் மிக்பெரிய நன்மை கிடைக்கும் எனவும் கடைநிலையில் உள்ள மக்களுக்கும் இதன் பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு சாரயம் விற்கும் அரசு, ஊழல் செய்யும் அரசு என விமர்சித்த பிப்ளப் குமார், தமிழ்நாடு மக்கள் அண்ணாமலையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர், “திரிபுராவிலும் திமிழ்நாட்டை போல ஒன்றரை சதவீதம் ஓட்டுகள் தன் இருந்தது, ஆனால் உழைப்பால் கடந்த 2018-ம் ஆண்டு திரிபுராவில் முதல்வராக ஆனேன். எனக்கு தெரியும் தமிழ்நாட்டு மக்கள் முன்பிருந்தே தயாராக இருக்கிறார்கள்.

வானதியை போல இன்னும் பல பிரநிதிகள் தமிழ்நாட்டில் வருவார்கள். நான் ஜோசியன் அல்ல, ஆனால் நம்பிக்கை இருக்கிறது. நான் அடுத்த முறை வரும்போது பாஜகவின் ஆட்சி தமிழ்நாட்டில் அண்ணாமலையின் தலைமையில் அமைந்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்மிடம் கூட்டம் குறைவாக இருக்கிறது என நினைக்க கூடாது. பாண்டவர்கள் ஐவர் இருந்தனர். பாண்டவர்களுடன் இருந்த அர்ஜூனனை போல நம்முடன் வானதி, அண்ணாமலை, பிரதமர் மோடி இருக்கிறார்கள்” என என தெரிவித்தார்.

இதுவரை ஐந்து லட்சம் பேர் இந்தியா முழுவதும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பதிவு செய்துள்ளார்கள் எனவும், இத்திட்டம் இப்போது தான் துவங்கப்பட்டத்து, வருங்காலத்தில் தேவை அடிப்படையில் தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார். திரிபுராவில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு உறுப்பினர் கூட இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் வானதி இருக்கிறார், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், “பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் விஸ்வகர்மா சமுதாய மட்டுமல்லாமல் கைவினை தொழிலாளர்கள் கைவினை கலைஞர்கள் உள்பட 18 வகையான தொழில்களுக்கு இத்திட்டத்தின் வாயிலாக உதவி செய்யப்படுகிறது.

மேற்கட்டமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ஒரு சில மேற்கு மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டு ஒரு குழு வாயிலாக கண்டறியப்பட்டு உண்மையான தகவல்களின் அடிப்படையில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் பயிற்சி உதவி தொகையும், அதன் பிறகு 15 ஆயிரம் ரூபாய்க்கு இலவசமாக தொழிலுக்கான கருவிகள் வழங்கப்படுகிறது.

அதன் பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்கு எந்த வித கொலாற்றல் இல்லாமலும் கடன் உதவி செய்யப்படும். இத்திட்டத்திற்கான கேரண்டி கொடுத்திருப்பவர் நரேந்திர மோடி. மேலும் எனது தொகுதியில் இது மூன்றாவது முகாம். இன்னும் ஒரு வாரம் கழித்து முடி திருத்துவதற்கு தனியாக முகாம் நடத்தப்பட உள்ளது. இன்று வந்த திரிபுரா முன்னாள் முதலவரிடம் இணையதளம் கொஞ்சம் வேகம் குறைவாக உள்ளது, ஆகவே அதை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “சட்டம் என்பது ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானதுதான்” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

உலக கோப்பை தொடரில் அகமதாபாத் விளையாட்டின் போது ஜெய் ஸ்ரீ ராம் கோசம் எழுப்பப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், "விளையாட்டின் போது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டுவது தவறில்லை என்றால் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போடுவதும் தவறில்லை.

இது தவறு என்றால் அனைத்தையும் தவறு என்று கூறுங்கள், இது தவறில்லை என்றால் மற்றதும் தவறு இல்லை. இதை அரசியல் ஆக்க வேண்டும் நினைப்பவர்கள் யார் என கேள்வி எழுப்பியவர், விளையாட்டை அரசியலாக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இதை அரசியலாக பார்க்க கூடாது. இதை அரசியல் செய்தால் அப்போது நியாயமாக அரசியல் செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு மதுபானகூட உரிமை வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், “மதுபானக்கூடங்கள் மட்டுமா திமுகவினருக்கு கொடுக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையும் கூட முதலில் வாங்கியவர்கள் யார் எனக் கேட்டால் அதுவும் திமுகவினர் என மக்கள் கூறுகிறார்கள். இதற்காக நாங்கள் முகாம் நடத்தும் போது அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

சனாதனம் தொடர்பாக உதயநிதியின் தரப்பில் அமைச்சராக பேசவில்லை தனி மனிதனாக பேசியது என்பது தொடர்பான கேள்விக்கு, “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி எப்போது கருத்து கூறினீர்கள், எப்போது அமைச்சராக கருத்து கூறுகிறீர்கள், என என கூறிவிட்டு கருத்து கூறுங்கள். ஒருநாளை 10 மணி நேரம் தனிமனித கருத்து கூறுவேன், 14 மணி நேரம் பொது கருத்து கூறுவேன் என்றெல்லாம் கூற முடியாது. அந்த மாதிரி வகைப்படுத்தி பார்ப்பதற்கெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை.

எதற்காக ரகசிய காப்புப் பிரமாணம் எதற்காக செய்கிறார்கள். பதில் பேச முடியாமல் சாக்குபோக்குக்காக இவ்வாறு பேசுகிறார். அமைச்சர் என்ற பொறுப்பை மீறி உதயநிதி இதைப் பேசியிருக்கிறார் சட்டப்படி இதை சந்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “200 கோடி ரூபாய் சாலை அமைப்பதற்கு தருகிறோம் எனக் மூன்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களில் கூறினார்கள். நேற்று பெய்த மழையில் புதிய சாலையில் லாரி கவிழ்ந்துள்ளது. தார் ரோடு போடுகிறார்களா அல்லது சப்பாத்தி போடுகிற மாதிரி மேலே தாரை பரப்பி வைத்து விட்டு செல்கிறார்களா என தெரியவில்லை. பெரிய காண்ட்ராக்ட் அனைத்தும் பெரிய குடும்பம் ஸ்ரீ காண்ட்ராக்ட் அனைத்தும் சிறிய குடும்பம் என சென்று கொண்டிருக்கிறது” என விமர்சித்தார்.

முதல் நாள் முதல் காட்சி என யார் படத்தையும் நான் பார்த்ததில்லை. லியோ ட்ரெய்லர் வெளியாகும் போது நான் வீட்டில் இருந்தேன். அப்போது பரபரப்பாக பேசப்பட்டதால் பார்த்தேன். வீட்டில் இருப்பவர்களோ அல்லது கட்சிக்காரர்களோ படம் நன்றாக இருக்கிறது, காமெடி படம் ஆக இருக்கிறது என்றால் பார்ப்பேன்” என கூறினார். லியோ படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு, தான் சென்சார் போர்டில் இருக்கும் போது உன்னிப்பாக பார்ப்பேன் எனவும் நிச்சயமாக சென்சார் போர்டு இதை கவனிப்பார்கள் என பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், “மதமாற்றத்திற்கு துணை போகிற விதத்தில் தான் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் இருக்கிறது. அதனால்தான் மக்கள் தன்னிச்சையாக ஆயிரக்காணக்கான அளவில் கூடுகிறார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செயல் கால்வாய்க்காக கோவை மாநகராட்சியில் தொண்டப்பட்ட குழிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பதன் காரணமாக, கல்லூரி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் மற்றொரு குடியிருப்பு பகுதியில் உள்ள 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பணிகளின் போது எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும். கோவை மாநகராட்சி இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்.

தன்னைப் பொறுத்தவரை கோவை மாநகராட்சியில் இன்னும் ஆக்கபூர்வமான பணிகளை நிறைய செய்ய முடியும் ஆனால் கோவை மாநகராட்சியில் அரசு அலுவலர்களுக்கு தகுந்த ஆள் இல்லை என்பதன் காரணமாக அனைத்திலும் சுணக்கமாக இருக்கிறது என குற்றம் சாட்டியதோடு சட்டப்பேரவையில் பேசும் போதெல்லாம் செய்வேன் என்கிறார்கள் ஆனால் இங்கே வந்து பார்க்கும்போது செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடியை தலைவராக ஏற்றுக் கொள்ளும் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் எனவும் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் எனவும் தங்கள் வேலை கட்சியை வளர்ப்பது எனவும் தெரிவித்த வானதி சீனிவாசன் "மேலே இருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள்" என நகைச்சுவையாக பதில் அளித்தார்.

இதையும் படிங்க: "ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் லியோ படத்தை கொடுக்காதது தான் தொல்லைக்கு காரணம்" - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.