கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, மேற்கு தொடர்ச்சி மலையின் கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகள் அடிக்கடி உலா வருவது வழக்கம்.
இந்நிலையில் சிறுவாணி அணை அருகே சோதனை சாவடி முன்பு சிறுத்தை ஒன்றை கருஞ்சிறுத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளது. இதை வனத்துறையினர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காவலர்கள், வனத்துறையினரை சீறிப்பாய்ந்து தாக்கிய சிறுத்தை!