ETV Bharat / state

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு - முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்! - தர்ணா போராட்டம்

கோயம்புத்தூர் : பொள்ளாச்சி அருகே வீரல்பட்டி கிராமத்தில் தனியார்  கோழிப்பண்ணை அமைய உள்ளது. இதனை எதிர்த்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்
author img

By

Published : Sep 24, 2019, 8:50 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வீரல்பட்டி கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாய நிலங்களையும், கால்நடைகளை வளர்த்தும் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

இந்நிலையில், கிராமத்தை ஒட்டி கோழிப் பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில், கோழிப்பண்ணை அமைத்தால் சுகாதாரச் சீர்கேடும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என கிராம மக்கள் கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், கோழிப்பண்னை அமைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும், அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், தற்போது அமைக்கப்படும் கோழி பண்ணை தாய்க் கோழி பண்ணையாகும். லட்சக்கணக்கான கோழிகள் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை நுரையீரல் பிரச்னை , சுவாசக் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுவட்டார கிராமங்களும் சுகாதாரச் சீர்கேட்டால் பாதிக்கப்படும். எனவே, கோழிப் பண்ணை அமைக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நடும் போராட்டம்

Intro:tharanaBody:tharanaConclusion:பொள்ளாச்சி அருகே வீரல் பட்டி கிராமத்தில் தனியார்  கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

பொள்ளாச்சி : செப் : 23

பொள்ளாச்சி அருகே உள்ள வீரல் பட்டி கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட  கிராம மக்கள் வசித்து வருகின்றனர் மேலும் விவசாய நிலங்கள் உள்ளன இப்பகுதி  விவசாயிகள்  கால்நடைகளை வளர்த்து பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரத்தை நடத்தி  வருகின்றனர் இந்நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு கிராமத்தை ஒட்டி கோழி பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பகுதியில் கோழிப்பண்ணை அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டும் என கிராம மக்கள் கோழி பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும்  மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை கோழிப்பண்ணை அமைப்பதை  தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்பகுதியில் கோழிப்பண்னை அமைக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து இன்று 100 கணக்கான மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தற்போது அமைக்கப்படும் கோழி பண்ணை தாய்க் கோழி பண்ணையாகும்  லட்சக்கணக்கான கோழிகள் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்படுகிறது இதனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை நுரையீரல் பிரச்சனை , சுவாசக் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் சுற்றுவட்டார கிராமங்களும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படும் எனவே பகுதியில் கோழி பண்ணை அமைக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.