கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர்.
சுயேச்சையாக போட்டியிடும் தாங்கள் வாக்காளருக்கு பணம் வழங்கப் போவதில்லை, நேர்மையான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் புதிதாக உருவாக்கப்பட்ட கருமத்தம்பட்டி நகராட்சியில் 5 வார்டுகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடுகின்றனர். இதில் ஆராய்ச்சி மாணவியும் தனியார் பொறியியல் கல்லூரி துணை பேராசிரியையுமான மோகன பிரியா 8ஆவது வார்டில் போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கல் இறுதி நாளான இன்று (பிப். 4) தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வந்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.