முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லம் மற்றும் இடங்கள் என தமிழ்நாட்டின் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நேற்று முன்தினத்தில் இருந்து நடைபெற்றது.
நேற்று முன்தினம் எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் சோதனை நிறைவு பெற்ற நிலையில் நேற்று அவருக்கு நெருக்கமானவரான சந்திரபிரகாஷின் பீளமேடு பகுதியில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் அலுவலகம் மற்றும் பாலத்துறை பகுதியில் உள்ள விஎஸ்ஐ சாண்ட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
பீளமேடு பகுதியில் நடைபெற்ற சோதனை இரவு 10 மணி அளவில் முடிவடைந்த நிலையில் சில ஆவணங்களை அலுவலர்கள் எடுத்து சென்றனர். மேலும் பாலத்துறை பகுதியில் நடைபெற்ற சோதனை நள்ளிரவு 12 மணியளவில் முடிவடைந்த நிலையில் அங்கிருந்தும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.