ETV Bharat / state

கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவை: காரமடை பகுதியில் உள்ள வித்யா விகாஸ் பள்ளி விடுதியில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நியாயம் கேட்டு பெற்றோர், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை
கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை
author img

By

Published : Dec 20, 2019, 10:24 PM IST

கோவை பாப்பம்பட்டி பிரிவைச் சேர்ந்த குமார்-சுமத்ரா தம்பதியின் மகன் ஷரிஷ். இவர் காரமடை பகுதியில் உள்ள வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் மாணவன் நேற்று மாலை பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பள்ளிக்குச் சென்ற பெற்றோர், உறவினர்கள் மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, முறையான விசாரணை செய்யக்கோரி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய குமார், "ஹரிஷின் தற்கொலையில் எனக்குப் பெரும் சந்தேகம் உள்ளது. பள்ளி விடுதியில் ஷரிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் இருந்தது. ஆகவே, ஷரிஷ் தற்கொலை குறித்து காவல் துறையினர் முறையான விசாரணை செய்ய வேண்டும். அதுவரை ஷரிஷின் உடலை வாங்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கடலூரில் காவல் துணைஆய்வாளர் மகன் தூக்கிட்டு தற்கொலை!

Intro:காரமடை தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்ததற்கு நியாயம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.Body:கோவை காரமடை பகுதியில் உள்ள வித்யா விகாஸ் பள்ளி மாணவன் தற்கொலை செய்த விவகாரத்தில் ஞாயம் கேட்டு மாணவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் ஹரிஷ் அவர் பெற்றோர் குமார்- சுமத்ரா. காரமடை பகுதியில் உள்ள வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் ஹரீஸ்(17) பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை செய்யக்கோரி மாணவனின் பெற்றோர் உறவினர் மற்றும் அப்பகுதி மக்கள் சுமார் 100 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நேற்று மாலை விடுதியில் தூக்கிட்டு இறந்த நிலையில் மாணவனின் சடலத்தை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் மாணவனின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் உறவினர்கள் ஆகியோர் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மாணவனின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் அதை முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணவனின் தந்தை குமார் நேற்று மாலை காரமடை எஸ் பி தொலைபேசியில் அழைத்து எனது மகன் இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு வரும்படியும் கூறியதாக தெரிவித்தார். மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் ஹரிஷ் இறந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்தார். மேலும் ஹரிஷின் தற்கொலையில் தனக்கு பெரும் சந்தேகம் உள்ளது என தெரிவித்தார். ஹரிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்றும் ஆனால் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறிய அந்த மின்விசிறி இருக்கும் இடமும் ரத்தம் சொட்டிய இடமும் சற்று தூரம் என்று தெரிவித்தார். இதைப்பற்றி காவலரிடம் விசாரிக்கையில் ஹரிஷ் முதலில் கத்தியால் கழுத்தை அறுத்து அதன் பின் வலி தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர் என்று கூறினார். மேலும் இதை பள்ளி நிர்வாகம் தன்னிடம் தெரிவிக்காமல் இருப்பது பெரும் சந்தேகத்தை வரவழைக்கிறது என்று தெரிவித்தார். பள்ளி நிர்வாகம் இது குறித்து தன்னிடம் எவ்வித செய்தியும் தெரிவிக்கவில்லை என்றும் எவ்வித கருத்துக்களையும் கூற மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். அப்பள்ளி விடுதியின் வார்டன் மீதுதான் தனக்கு பெரும் சந்தேகம் உள்ளது என்றும் அந்த வார்டனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார் அதுவரை ஹரிஷின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறினார். மேலும் தன் மகன் ஹரிஷ் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவர் என்றும் தற்கொலை செய்து கொள்ள எவ்வித காரணமும் இருக்காது என்றும் தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.