ETV Bharat / state

மேட்டுப்பாளையம் விவகாரம்: திருமா போராட்டம்!

author img

By

Published : Dec 16, 2019, 9:40 PM IST

கோவை: மேட்டுப்பாளையத்தில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது.

விசிக போராட்டம்!
விசிக போராட்டம்!

கோவை மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “சம்பவம் நடந்தபோது நான் வெளிநாட்டில் இருந்ததால் தற்போதுதான் வந்தேன். அந்தச் சுவரை எடுக்கச் சொல்லி மக்கள் பலமுறை கேட்டபோது, அந்த மக்களை ஜாதி பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியுள்ளனர். அந்தச் சுவரை தீண்டாமைச்சுவர். அதனால் இந்த விவகாரத்தில் கைதானவரை வன்கொடுமை தீண்டாமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

விசிக போராட்டம்!

மேலும் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கேட்டு போராடியவர்களைக் கைது செய்ததற்காக தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்த திருமாவளவன், மோடி அரசு மக்களை வஞ்சிக்கின்ற செயலையே மீண்டும் மீண்டும் செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்

Intro:மேட்டுப்பாளையத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தையினர் கண்டன ஆர்ப்பாட்டம் இதில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.Body:கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார் அதன்பின் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தலைவர் திரு தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். இதில் ,இறந்தவர்களுக்கு நீதி கேட்டு போராடி அவர்களை கைது செய்த காவல்துறையை கண்டித்தும் அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன் சம்பவம் நடந்த போது தான் வெளிநாட்டில் இருந்ததால் தற்போதுதான் வந்ததாகவும் தெரிவித்தார் கண்டவுடனேயே மேட்டுப்பாளையம் சென்று பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்து வந்ததாக தெரிவித்தார். மேலும் இந்த அமைக்கப்பட்ட சுவரில் எடுக்க சொல்லி மக்கள் பலமுறை கேட்ட போது அந்த மக்களை ஜாதி பெயரை சொல்லி இழிவு படுத்தியதாக மக்கள் கூறினர் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார் இதன் மூலம் ஜாதி மதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை என்றும் அந்தச் சுவர் தீண்டாமைச்சுவர் என்றும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கேட்டு போராடியவர்களை இந்த அரசு கைது செய்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார் அதன் பின் பல போராட்டங்கள் நடத்தி அந்த சுற்றுச்சுவரின் சொந்தக்காரரை அரசு கைது செய்துள்ளது அவர் மீது வன்கொடுமை தீண்டாமைச் சட்டம் போட வேண்டும் என்றும் தெரிவித்தார் மேலும் மோடி அரசு மக்களை வஞ்சிக்கின்ற செயலையே மீண்டும் மீண்டும் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.