ETV Bharat / state

'உணவு உற்பத்திக்கு ஒருங்கிணைந்த விவசாயம் தேவை' - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர்!

கோவை: கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை சமாளிப்பதற்கு ஒருங்கிணைந்த விவசாயம் தேவை என்று தெரிவித்தார்.

vanavarayar Institute of agricultre
மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
author img

By

Published : Dec 19, 2019, 1:48 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இயங்கி வரும் மணக்கடவு தனியார் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், இளநிலை, முதுநிலையைச் சேர்ந்த 240 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மக்கள் தேவைக்கு ஏற்ப உரங்களைப் பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயம் நல்லது தான். ஆனால், சில நேரங்களில் அதிலிருந்து வரும் பூச்சிகள் மற்ற விவசாய நிலங்களுக்கும் பரவி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுகளைத் தயாரிப்பதற்கு ஒருங்கிணைந்த விவசாயம் தேவைப்படும்’ என்றார்.

மணக்கடவு வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மேலும், ' வேளாண்மை கல்வி என்பது மதிப்புமிக்க அறிவியலில் ஒன்றாகும். வேளாண் பாடத்திட்டம் பல துறைகளை உள்ளடக்கியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பிற்கு இருந்த வரவேற்பு குறைந்து, தற்போது மாணவர்கள் வேளாண்மைத் துறையை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். 2019-20ஆம் ஆண்டுக்கு 52 ஆயிரம் மாணவர்கள் வேளாண் படிப்பிற்கு விண்ணப்பித்தனர். பொங்கலுக்கு வேளாண்மைப் பல்கலைக் கழகம் சார்பில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘வாக்காளர்களைப் பலமுறை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும்’ - அரசுத் தலைமை கொறடா அறிவுரை!

Intro:functionBody:functionConclusion:பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க ஒருங்கிணைந்த விவசாயம் தேவை பொள்ளாச்சியில்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார்
பேட்டி
பொள்ளாச்சி : டிச: 18
பொள்ளாச்சி அடுத்த மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில்
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் பங்கேற்றார்.
 இளநிலை, முதுநிலையை 
சேர்ந்த 240 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய நிலை உள்ளது தேவைக்கு ஏற்ப உரங்களை பயன்படுத்த வேண்டும் உயர்ரக விளைச்சல் தரும் உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது விலை அதிகமாக ஈட்டமுடியும் இயற்கை விவசாயம் நல்லது தான் சில நேரங்களில் அதிலிருந்து வரும் பூச்சிகள் மற்ற விவசாய நிலங்களுக்கும் பரவி நோய்கள் பரவும் நிலையும் உள்ளது விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு அதே மண்ணில் உள்ள தலைகளை மக்கி மீண்டும் விவசாயம் மேற்கொண்டால் மண் வளம் அதிகரிக்கும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த விவசாயம் தேவை என தெரிவித்த துணைவேந்தர் குமார் வேளாண்மை கல்வி என்பது மதிப்புமிக்க அறிவியலில் ஒன்றாகும். வேளாண் பாடத்திட்டம் பலதுறைகளை உள்ளடக்கியது. விவசாயம் இந்தியப்
பொருளாதாரத்தில் முதுகெலும்பாகும். காலநிலை மாற்றம் விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.  இருந்தபோதும், இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 283 மில்லியன் டன்களை தொட்டுள்ளது. 2017-18ம் ஆண்டுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் 300 மில்லியன் டன்களை தாண்டியுள்ளது. 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பிற்கு இருந்த வரவேற்பு குறைந்து தற்போது மாணவர்கள் வேளாண்மை துறையை நோக்கி வரத்துவங்கியுள்ளனர். 2019-20 ஆண்டுக்கு 52 ஆயிரம் மாணவர்கள் வேளாண் படிப்பிற்கு விண்ணப்பித்தனர். வேளாண் படிப்பிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பொங்கலுக்கு வேளாண்மை பல்கலைகழகம் சார்பில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.