பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவராக நேற்று (நவ.20) பொறுப்பேற்றுக் கொண்ட வானதி சீனிவாசன், டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பாஜக மகளிரணி தலைவர் பதவி என்ற மிக முக்கியமான கௌரவத்தை தலைமை எனக்கு வழங்கி உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை பெண்கள் வழியாக கொண்டு செல்வது எனது பிரதான பணியாக இருக்கும். நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாவலராக பிரதமர் மோடி இருக்கின்றார்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, வெற்றிவேல் யாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் நடத்திக்கொண்டு இருக்கின்றார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வருவது மூலம் மாற்றங்கள் நடக்கும். பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கின்றது.
பாஜகவிற்கு இனி தமிழ்நாட்டில் பின்னடைவு என்பதே கிடையாது, முன்னேற்றம் மட்டும்தான்" என்றார்.
இதையும் படிங்க: மு.க. அழகிரி பாஜகவில் இணைய வந்தால் வரவேற்போம் - எல் முருகன்!