கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசுக்கும், தனியாருக்கு சொந்தமான காபி, தேயிலை எஸ்டேட் உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்கள் உள்ளன. எஸ்டேட்கள் அடர் வனப்பகுதியை ஒட்டியும், நீரோடைகள் நிறைந்த இடங்களாக இருப்பதால் விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான காபி எஸ்டேட்டில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது, புலி நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்துப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.