வால்பாறையில் பச்சமலை, பழைய வால்பாறை, வில்லோணி உருளிக்கல் வரட்டுப்பாறை, பண்ணிமேடு ஆகிய எஸ்டேட் பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலை தேயிலை உற்பத்தி செய்துவருகிறது. உற்பத்திசெய்யப்படும் தேயிலை கேரள மாநிலம் கொண்டுசெல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
தற்போது, கரோனா அச்சத்தால் கேரள மாநிலம் மளுக்கப்பாறை சோதனைச்சாவடியை மூடியுள்ளதால் தேயிலையைக் கொண்டுசெல்ல முடியாமல் அந்த தனியார் நிறுவனம் திணறிவருகிறது. இதனால், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளது.
கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், தேயிலை நிறுவனமும் சரிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் - விஜய பாஸ்கர்