ETV Bharat / state

பண மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனத்தை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்! - sit fund forgery in Coimbatore

கோவை: பணமோசடி செய்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் என்ற சிட்பண்ட் நிறுவனத்தை அதன் முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

universal trading solution sit fund forgery issue
author img

By

Published : Nov 7, 2019, 11:12 PM IST

கோவை பாப்பம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கோவை பீளமேடு பகுதியில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற சிட்பண்ட் நிறுவனத்தை கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்,மாதம் இரண்டு தவனையாக 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்கள் வழங்கப்படும் என்றும் 10 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதனை நம்பி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர், ஒரு லட்ச ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அதன்படி அந்த நிறுவனம் சுமார் 2,200 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றிருக்கிறது.

யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்

தமிழ்நாட்டில் மட்டும் 36 கிளைகள் கொண்ட இந்நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு ஆரம்பத்தில் பணம் செலுத்தி வந்துள்ளது. பின்னர் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 350 பேர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அலுவலகத்தை தொடர்புகொள்ள முடியாமல் தவித்த 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கோவை பீளமேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பீளமேடு காவல் ஆய்வாளர் ஜோதி பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பாதிக்கப்பட்டவர் பேட்டி

மேலும் பாதிக்கப்பட்ட 350 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், நாளை கோவை பொருளாதார குற்றப்பிரிவில் தனித்தனியாக புகார் கொடுக்கும்படி கூறினார். 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சிட்பண்ட் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'மக்கள் இணையத்தின் மூலம் அனைத்துச் சேவைகளையும் பெறவேண்டும் என்பதே என் கனவு' - முதலமைச்சர் பழனிசாமி!

Intro:பல கோடி மோசடி செய்த நிறுவனம். நிறுவனத்தின் முன் திரண்ட பாதிக்கப்பட்ட மக்கள்.Body:கோவை பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கோவை பீளமேடு ராம்லக்‌ஷ்மன் நகரில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற சிட் பண்ட் நிறுவனத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு துவக்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் இரு தவனையாக 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்கள் வழங்கப்படும். 10 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதனை நம்பி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர், ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை சுமார் 2200 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் இந்த நிறுவனத்திற்கு 36 கிளைகள் உள்ளன.
ஆரம்பத்தில் கூறியதை போல் டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் செலுத்தி வந்த நிதி நிறுவனம், பின்னர் டெபாசிட்தாரர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 350 பேர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததை தொடர்ந்து ரமேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட 350 பேர் சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப நிகழும் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த டெபாசிட் தாரர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் கோவை பீளமேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து அலுவலத்தில் இருந்த ஊகழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
தகவல் அறிந்து வந்த பீளமேடு காவல் ஆய்வாளர் ஜோதி பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட 350 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தள்ளதால் நாளை கோவை பொருளாதார குற்றப்பிரிவில் தனித்தனியாக புகார் கொடுக்கும்படி கூறினார்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மோசடி குறித்து தகவல் கொடுத்து வருகின்றனர்.
இன்று கோவை, திருச்சி, பெரம்பலூர், மதுரை, கேரள உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் வந்துள்ளனர். நாளை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். முதலீட்டாளர் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி : ஜீவானந்தம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.