கோவையில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கோவை மாநகர் பகுதியான உக்கடம், காந்திபுரம், குனியமுத்தூர், போத்தனூர் ஆகியப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
இதனால் கோவையில் முக்கியப் பேருந்து நிலையமான உக்கடம் பேருந்து நிலையத்தின் சுமார் 15 அடி நீள பெயர்ப் பலகை கீழே சாய்ந்தது. இரவு நேரம் என்பதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல் துறையினர் ராட்சத கிரேன் மூலம் அந்தப் பெயர் பலகையை அங்கிருந்து பத்திரமாக அகற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பெயர்ப் பலகை தயார் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.