ETV Bharat / state

உடுமலை சங்கர் கொலை வழக்கு: திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்! - Dravidian Tamil Party Demonstration in Coimbatore

கோவை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jun 24, 2020, 11:47 AM IST

கோவை கோபாலபுரம் பகுதியில் திராவிடர் தமிழர் கட்சியினர், வழக்குரைஞர் வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பியதோடு, உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

அதன் பின்னர் வழக்கறிஞர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆணவப்படுகொலைக்குப் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அனைவரும் கூறிவரும் நிலையில், முதல் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட கௌசல்யாவின் தந்தை விடுதலை ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆணவப்படுகொலைக்கு எதிராக எதிர்காலத்தில் பல்வேறு வழக்குகள் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பானது இனிவரும் வழக்குகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஆணவப் படுகொலைக்கு உண்டான மத்திய சட்டத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லி பல்கலை.யில் ஓபிசி மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு: திமுக கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.