ETV Bharat / state

இரு சக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி கொண்டு விசாரணை - police Investigation

கோவையில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை இரண்டு இளைஞர்கள் திருடும் சிசிடிசி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சி கொண்டு விசாரணை
சிசிடிவி காட்சி கொண்டு விசாரணை
author img

By

Published : Sep 28, 2021, 8:45 PM IST

கோயம்புத்தூர்: மசக்காளிபாளையம் பகுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாரதி, பீட்டர் பணி நிமித்தமாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (செப்.25) பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய இருவரும் இரண்டு சக்கர வாகனங்களை வீட்டின் முன் நிறுத்திவைத்துள்ளனர்.

இரு சக்கர வாகனம் திருட்டு

அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும், இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்‌.

புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு வாகனங்களை திருடிச் சென்ற இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இனி பெட்ரோலுக்கு குட் பை - பெட்ரோல் பைக்கை மின்சார வாகனமாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.