கோயம்புத்தூர்: துடியலூரிலிருந்து கணுவாய் செல்லும் சாலையில் தனியார் சிப்ஸ் கடை உள்ளது. கடந்த 25ஆம் தேதி இரவு அங்குப் பணிபுரியும் ஊழியரின் இருசக்கர வாகனம் காணாமல்போனது. உடனே சிசிடிவி கேமரா பதிவை கடையின் உரிமையாளர் பார்த்துள்ளார்.
அதில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் தள்ளிச் செல்வது பதிவாகியிருந்தது.
பின்னர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட இளைஞரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - பாட்டி உள்பட இருவர் கைது