ETV Bharat / state

சிறார் ஆபாசப் படங்கள் பதிவிறக்கம்; போக்சோவில் இருவர் கைது! - கோவை மாவட்ட செய்திகள்

கோவை: தடை செய்யப்பட்டுள்ள சிறார் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Two persons arrested for downloading child pornography
சிறார் ஆபாச படம் பதிவிறக்கம்; போக்சோவில் இருவர் கைது
author img

By

Published : Jan 5, 2020, 4:17 PM IST

தமிழ்நாட்டில் சிறார் ஆபாசப் படங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்பவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுதொடர்பாக, நாற்பதிற்கும் மேற்பட்ட ஐபி எண்கள் கோவை மாவட்ட போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முகநூலில் சிறார் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்ததாக பொள்ளாச்சியில் தங்கி பணியாற்றிவரும் அஸ்ஸாம் மாநில இளைஞர் ரெண்டா பசுமாடாரியும், கோவை தனியார் கல்லூரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற இளைஞரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து, அவர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், கோவை மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்களின் பட்டியலை சேகரித்து வருவதாகவும் அவர்கள் மீது விரைவில் சட்டப்படி கைது நடவடிக்கை தொடரும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: முகநூலில் சிறார்களின் ஆபாச படங்களைப் பகிர்ந்த அஸ்ஸாம் இளைஞர் கைது!

Intro:சிறார் ஆபாச பட பதிவிறக்கம். கோவையில் ஒருவர் கைது.Body:தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்பவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தவறுகளை செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மற்றும் சென்னையில் அடுத்தடுத்து இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சைபர் கிரைம் போலீசார் 40க்கும் மேற்பட்ட ஐபி எண்களை கோவை மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முகநூலில் சிறார் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்த வழக்கில் பொள்ளாச்சியில் தங்கி பணியாற்றிவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பசுமாடாரி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று கோவை தனியார் கல்லூரியில் ஓட்டுனராக பணியாற்றி வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கோவை மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் சிலர் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் பட்டியல் விவரங்களை சேகரித்து வருவதாகவும் விரைவில் சட்டப்படி கைது நடவடிக்கை தொடரும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.