கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பெரிய புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவர் அந்த கிராமத்தில் மளிகைக் கடை, கால்நடை தீவனம், மற்றும் மின் உதிரி பொருட்கள் விற்பனை கடை ஆகியவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக அவரது மகள் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்களது கடைக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.24) இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பொருட்கள் வாங்குவது போல் பாவனை செய்து உள்ளனர். அப்போது கடைக்கு வந்த முதியவர் அந்த கடையில் கால்நடை-க்கு தீவனம் வாங்கினார்.
பின்னர் இருசக்கர வாகனத்தில் அந்த மூட்டையை ஏற்ற முயன்ற போது, இருசக்கர வாகனம் கீழே விழுந்துள்ளது. இதனைக் கண்ட கடையின் உரிமையாளரான ரேணுகா மற்றும் அவரது மகள் இருவரும் முதியோருக்கு உதவி செய்ய வந்துள்ளனர்.
அப்போது இந்த சூழலில் வாய்ப்புக்காகக் காத்திருந்த இருசக்கர வாகனத்தில் வந்திருந்த மர்ம நபர்கள் அவர்களுக்கு உதவுவது போல நடித்து அருகில் சென்று ரேனுகாவின் மகள் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையைக் கழுத்திலிருந்து தங்க நகைகளைப் பறிப்பதற்குச் செய்ய முயன்றுள்ளனர்.
நல் வாய்ப்பாக செயின் செயின் பறிப்பு முயற்சியினை ரேணுகாவின் மகள் சுதாரித்துக் கொண்ட நிலையில், அந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்த தப்பி ஓடினர். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காரமடை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சியை வைத்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!