ETV Bharat / state

ஆனைகட்டி பகுதியில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு - மேற்கு தொடர்ச்சி மலை பகுதி

கோவை ஆனைக்கட்டி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் அடுத்தடுத்த இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Two people died in attack by elephant in Anaikatti area
ஆனைகட்டி பகுதியில் யானை தாக்கி இருவர் பலி
author img

By

Published : Mar 2, 2023, 10:29 AM IST

கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது. அந்த வகையில் தடாகம் அடுத்த மாங்கரை வனச் சோதனைசாவடி அருகே வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை இராமச்சந்திரன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்தது.

அங்கு இருந்த அவரது மருமகன் மகேஷ் குமார் யானையை விரட்ட முயற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென அவரை விரட்டி தாக்கிய யானை காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனிடையே அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டி மகேஷ் குமாரின் உடலை மீட்டனர். இதுகுறித்து சின்ன தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து அங்கு வந்த போலீசார் மகேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று ஆனைகட்டி அடுத்த தூவைபதி கிராமத்தில் இன்று காலை 7 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற மருதாசலம் என்பவரை ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் மருதாச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இன்று அதிகாலை ஒற்றை யானை தோட்டத்துக்குள் புகுந்த நிலையில் மகேஷ் குமார் யானையை விரட்ட முயற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது யானை நிற்பது தெரியாமல் அருகில் சென்றதால் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. விவசாய நிலங்கள் அல்லது தோட்டத்திற்குள் யானை புகுந்தால் அவர்களாக யானை விரட்ட முற்படக்கூடாது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அங்கு வந்து யானையை விரட்டும் பணிகள் ஈடுபடுவார்கள்.

அதேபோன்று வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்போர் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரும் போது கவனமாக வர வேண்டும். யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்; வழக்கு பதிவு செய்யாமல் போலீஸ் அலட்சியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.