ETV Bharat / state

கோவை மாணவி தற்கொலை வழக்கு: மேலும் இருவர் கைது... - மாணவி தற்கொலை வழக்கு

கோயம்புத்தூரில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Coimbatore student suicide issue  suicide issue  student suicide issue  Coimbatore student suicide case  கோவை மாணவி தற்கொலை  கோவை மாணவி தற்கொலை வழக்கு  மாணவி தற்கொலை வழக்கு  தற்கொலை வழக்கு
தற்கொலை வழக்கு
author img

By

Published : Aug 5, 2022, 7:04 AM IST

கோயம்புத்தூர்: தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டார்.

இயற்பியல் ஆசிரியர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் சிலரின் பெயரை குறிப்பிட்டு, அவர்களையும் விடக்கூடாது என எழுதி இருந்தார். கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மாணவி கடிதத்தில் எழுதி வைத்திருந்த நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . அதில் ஒருவர் மாணவியின் வீட்டில் அருகில் வசிப்பவர் என்பதும், மற்றொருவர் மாணவியுடன் படித்த சக மாணவியின் தந்தை என்பதும், இவர்கள் இருவரும் மாணவியை பாலியல் சீண்டல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து இருவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றம் முன் நிறுத்தி, சிறையில் அடைத்தனர். இதில் கைதான ஒருவர், பெரிய பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்தவர் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றியது உயர் நீதிமன்றக்கிளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.