ETV Bharat / state

தூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொலை வழக்கு: இருவர் சரண் - குற்றவாளி சரண்

கோவை: தூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

saravanan
author img

By

Published : Jul 30, 2019, 3:04 AM IST

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலைச் சேர்ந்தவர் வி.எஸ்.கருணாகரன்(55). இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்த பணிகளை செய்து வந்துள்ளார். திமுக செயற்குழு உறுப்பினரான இவர், அனிதா ராதாகிருஷ்ணின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி குலையன்கரிசலில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வழிமறித்த கும்பல் ஒன்று கருணாகரனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

accused surrender  தூத்துக்குடி கொலை  திமுக பிரமுகர்  குற்றவாளி சரண்  pollachi jm
சக்திவேல்

இதையடுத்து, புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்த நிலையில், பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குலையன்கரிசலைச் சேர்ந்த சரவணன்(27), சக்திவேல்(20) ஆகியோர் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

சரவணன்

இதையடுத்து, இவர்களை ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Intro:SarenderBody:SarenderConclusion:திமுக பிரமுகர் கொலை இருவர் சரண்

பொள்ளாச்சி, ஜூலை.29

தூத்துக்குடியை சேர்ந்த திமுக செயற்குழு உறுப்பினர் கொலை வழக்கில் இருவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

 தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசலை சேர்ந்தவர் வி.எஸ்.கருணாகரன்(55), இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்த பணிகளை செய்துவந்துள்ளார். திமுக செயற்குழு உறுப்பினரான இவர் அனிதா ராதாகிருஷ்ணின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 22ம் தேதி குலையன்கரிசலில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த கும்பல் ஒன்று  கருணாகரனை வெட்டிக்கொலை செய்தது. இதையடுத்து, புதுக்கோட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து ஐந்து பேரை கைதுசெய்துள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் கருணாகரன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குலையன்கரிசலை சேர்ந்த சரவணன்(27), சக்திவேல்(20) ஆகியோர் சரண்அடைந்தனர். சரண் அடைந்தவர்களை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் வரும் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.