கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ரயான் டிவிசன் பகுதியில் வனத் துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக கதண்டுகள் எனப்படும் விஷ வண்டுகள் வனத் துறையினரைத் தாக்கின.
அதில் நாராயணன் (29), அரவிந்த் (27) ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். அதையடுத்து வனத் துறையினர் இருவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமணையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தோட்டத் தொழிலாளியைக் கடித்த விஷப்பாம்பு