கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே இருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை அழைத்து விசாரித்தபோது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கேரள மாநிலம் கோட்டை துறையைச் சேர்ந்த பாண்டியன்(39) அரவிந்த் (19) என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தடாகம் காவல் துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா புகைக்கும் சிறார்கள்; வெளியான அதிர்ச்சி காணொலி!