ETV Bharat / state

கோவையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை; இருவர் கைது!

author img

By

Published : Jan 11, 2022, 12:58 PM IST

Updated : Jan 11, 2022, 1:04 PM IST

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குக் கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு செருப்பு மாலை அணிவித்ததாக இருவரை கைதுசெய்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Two arrested for insulting Periyar STATUE  in Coimbatore

கோயம்புத்தூர்: வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு, வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் மீது செருப்பு மாலை அணிவித்து, காவி நிற பொடியும் இருந்துள்ளது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பெரியார் படிப்பக நிர்வாகிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த நிர்வாகிகள் போத்தனூர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர்.

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு

இந்நிலையில், அப்போது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போத்தனூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இதில், வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த இந்து முன்னணி ஆதரவாளர்கள் இருவர் கைது

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதனைச் செய்தது அவர்கள் தான் என உறுதியானதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இருவரும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 50 லட்சம் தொண்டர்கள்.. டிஜிட்டல் பேரணிக்கு தயாராகும் பாஜக!

Last Updated : Jan 11, 2022, 1:04 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.