கோயம்புத்தூர்: சரவணம்பட்டி நியூ வசந்தம் நகர் பகுதியில் பெண் மருத்துவர் ஒருவர் மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மருத்துவரின் கழுத்தில் இருந்த தங்கச் செயினைப் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டதால் செயினைப் பறிக்க முடியாமல் தப்பிச் சென்றார். இந்தக் காட்சி அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இது குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த நான்கு மாதங்களில் மூன்று வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காவல் துறையினர் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் - தடுப்பணை கட்ட கோரிக்கை