இந்தப் போராட்டம் குறித்து பேசிய போக்குவரத்து ஊழியர் ஒருவர், "அரசு ஊழியர்கள், அரசு நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸ் வழங்கிவிட்டது. ஆனால் விழாகாலங்களில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் வழங்காமல் இந்த அரசு இழுத்தடிக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. அந்த சிறப்பு பேருந்துகளையும் போக்குவரத்து ஊழியர்கள் தான் இயக்கப்போகிறார்கள். இப்படி பண்டிகை காலத்தில் இரவு, பகல் பாராமல் மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களை அரசு சுத்தமாக கண்டுகொள்வதில்லை.
மற்ற அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாடும் போக்குவரத்து ஊழியர்களாகிய நாங்கள் எங்கள் குடும்பங்களுடன் பண்டிகை கொண்டாட முடியாமல் எங்கள் வேலையை பார்க்கிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு போனஸ் வழங்காததைக் கண்டித்து நாங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்" என்றார்.
இதேபோல், தீபாவளி போனஸ் தொகையை வழங்க வலியுறுத்தி பெரம்பலூர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், பெரம்பலூர் பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தனியார் மட்டும் லாபம் அடைய வேண்டுமா? -வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி