கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜு (42). இந்து முன்னணி ஆதரவாளரான இவரை ஏழு பேர் கொண்ட கும்பல் நேற்று (செப்டம்பர் 13) அரிவாளால் சரமாரியாகத் தாக்கியது. அதில் பலத்த காயமடைந்த அவர், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து காட்டூர் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்து முன்னணி ஆதரவாளர் வெட்டிக் கொலை!
இந்நிலையில் பிஜுவின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ராமநாதபுரம் பகுதியில் தகனம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், இறுதி ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர்.
சுமாராக 100 இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றதால் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக ஊர்வலம் வரும்போது வாகனங்களில் கலந்துகொள்ள வந்தவர்களை காவல் துறையினர் நிறுத்திவைத்ததால் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இதர வாகனங்களும் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:நீட் வேண்டாம்: நாடாளுமன்றத்தில் பதாகைகள் ஏந்தி திமுக எம்.பி.க்கள் போராட்டம்