கோயம்புத்தூர்: பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் நேற்று (அக்.16) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்றுள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வரவேற்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் பேனர்கள் வைத்துள்ளனர். அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பாகுபலியாக சித்தரித்து வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆனைமலை நகர எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் ரஹமத்துல்லா என்பவர் சார்பில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைய எஸ்.பி.வேலுமணி காரணமாக இருந்ததை வெளிக்காட்டும் வகையில், அம்மா அரசை காத்து நிற்கும் பாகுபலியே வருக! வருக! என எழுதப்பட்டிருந்தது.
தற்போது இந்த பேனர் புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் பரிதாப உயிரிழப்பு