கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்துமுடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமமுக புகழேந்தி அதிமுகவில் இணைய கடிதம் கொடுத்தால், தலைமைக் கழகம் பரிசீலித்து முடிவெடுக்கும். தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்தில் அறிவிப்பார்கள் என நம்புகிறோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிதான் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்” என்றார்.
ரஜினிகாந்த் கூறிய வெற்றிடம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், “ரஜினிகாந்த் ஒரு நடிகர். அரசியல் தலைவர் அல்ல. விறுவிறுப்பான செய்தி வேண்டுமென்பதற்காக ரஜினியின் கருத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன” என்றார். மேலும், தொல்லியல் துறை வசமுள்ள மாமல்லபுரத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுற்றுலாத்தலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை? - உயர் நீதிமன்றம் கேள்வி