பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரங்கள் அழிக்கப்படுவதை பார்த்து பொறுக்க முடியாத சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, தற்போது பல்வேறு நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
மனைவி ஜெயசீலா, இரு குழந்தைகளின் உதவியுடன் இப்பணியை ஜெகநாதன் செய்து வருகிறார்.
நடப்பட்ட அத்தனை மரக்கன்றுகளுக்கும், குளுக்கோஸ் பாட்டில்களை பயன்படுத்தி 'டிரிப்ஸ்' முறையில் நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மரக்கன்றுகளை விலைக்கு வாங்கும் செலவுகளையும் அவர்களே ஏற்றுள்ளனர்.
வீட்டுக்கு மரம் வளர்ப்பதைவிட, இப்படி பொது இடங்களில் மரங்களை வளர்ப்பதால், இந்த நாட்டுக்கே பயனளிக்கும் என கூறுகிறார் ஜெகநாதன்.