ETV Bharat / state

பொள்ளாச்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் மையம் தொடக்கம்! - pollachi

கோவை: பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ ஒன்றுக்கு ரூ. 95.21 காசு ஆதார விலையில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யும் விதமாக கொள்முதல் மையத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கிவைத்தார்.

பொள்ளாச்சியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் தொடக்கம்!
author img

By

Published : Jul 23, 2019, 1:50 PM IST

தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு கிலோ கொப்பரைத் தேங்காய்க்கு ஆதார விலையாக ரூ. 95.21 காசு நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கொப்பரைக் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நடந்த நிகழ்வில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு கொள்முதல் மையத்தை தொடங்கிவைத்தனர்.

பொள்ளாச்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் மையம் தொடக்கம்!

மேலும் அரவை ரக கொப்பரைத் தேங்காய்களுக்கு 95 ரூபாய் 21 காசும், பந்து வகை கொப்பரைத் தேங்காய்களுக்கு 99 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு இந்த மையத்தின் உதவியுடன் மத்திய அரசு நிறுவனமான நேபட் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றும், இதனால் தென்னை விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் நவம்பர் மாதம் வரை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொப்பரையை கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் கொப்பரைக் கொள்முதல் மையம் தொடங்கியது தென்னை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

.

Intro:menister programBody:menister program Conclusion:பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கிலோ ஒன்றுக்கு ரூ. 95.21 காசு ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் விதமாக கொள்முதல் மையம் தொடக்கம் - உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கொப்பரை கொள்முதலை தொடங்கி வைத்தார்

பொள்ளாச்சி - ஜூலை - 22

தமிழகத்தில் தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரைத் தேங்காய்க்கு ஆதார விலையாக 95 ரூபாய் ஒரு காசு நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, அதன்படி தமிழகம் முழுவதும் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கொப்பரை கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது, இதேபோல் பொள்ளாச்சியில் இன்று வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது, இந்த மையத்தில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு கொள்முதல் மையத்தை தொடங்கி வைத்தனர்,இந்த கொள்முதல் மையத்தில் அரவை கொப்பரைக்கு 95 ரூபாய் 21 காசுக்கும், பந்து வகை கொப்பரைக்கு 99 ரூபாய் விலையில் இந்த மையத்தில் மத்திய அரசு நிறுவனமான நேபட் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றும், இதனால் தென்னை விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார், இந்தாண்டு துவங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் மூலம் நவம்பர் மாதம் வரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொப்பரையை கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், பொள்ளாச்சியில் கொப்பரை கொள்முதல் மையம் தொடங்கப்பட்டு கொப்பரை கொள்முதல் செய்ய தொடங்கியதால் தென்னை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பேட்டி -எஸ்.பி. வேலுமணி - உள்ளாட்சித் துறை அமைச்சர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.