ETV Bharat / state

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு: 3 இளைஞர்களை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி - CBE

கோவை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று இளைஞர்களை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ்
author img

By

Published : Jun 27, 2019, 4:15 PM IST

கோவையில் கடந்த 13ஆம் தேதி போத்தனூர் பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறி இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூன்று பேரையும், எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அனுமதி அளித்தார்.

Intro:கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஷாஜகான்,ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுBody:

கோவையில் கடந்த 13ம் தேதி போத்தனூர் பகுதியை சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கோவையில் பல்வேறு இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறி இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாநகர காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக முகமது உசேன் ,ஷாஜகான் , ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரும் இன்று நீதிமன்றத்திற்காக அழைத்து வரப்பட்டனர். முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அனுமதி அளித்தார். இதனையடுத்து 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.