ETV Bharat / state

மருத்துவத்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தில் 57 ஆயிரத்து 4 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

author img

By

Published : Jan 16, 2021, 4:04 PM IST

கோவை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி முகாமின் செயல்பாட்டை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இதில் முதல் தடுப்பூசி கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் மருத்துவர் பூமாவுக்கு செலுத்தப்பட்டது. இவருக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி வேலுமணி
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது, "உலகத் தரமான மருத்துவ சேவை, உயர்தர மருத்துவ சிகிச்சை, அதிநவீன சிகிச்சை உபகரணங்கள் என தமிழ்நாடு மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. கோவை மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 53 ஆயிரத்து 475 பேரில், இதுவரை 52 ஆயிரத்து 588 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கோவையில் 40 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முகாம்களிலும் நாளொன்றுக்கு 100 பேர் வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு

மாவட்டத்தில் 57 ஆயிரத்து 4 பேர் பிரத்யேக செயலியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர். தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட பிறகு, 28 நாட்களுக்குப்பின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14 நாட்களுக்குப் பிறகே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

கர்ப்பிணிகள், குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்ற தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு, குறைந்தது 14 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக முன் களப்பணியில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் இன்று(ஜனவரி 16) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், 34 மருத்துவர்கள் 37 மருத்துவ மாணவர்கள் உட்பட 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'மருத்துவர்கள், விஞ்ஞானிகளை நம்புகள்; வதந்திகளை நம்ப வேண்டாம்'- பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.