ETV Bharat / state

தமிழ்நாடு எல்லைகளில் கழிவுகள்: கேரளாவின் தொடரும் அத்துமீறல் - police

கோவை: மருத்துவக் கழிவுகளையும் நெகிழிக் கழிவுகளையும் தமிழ்நாடு எல்லைகளில் கொட்ட கேரளாவிலிருந்து வந்த இரண்டு லாரிகளை போத்தனூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு எல்லைகளில் கழிகளை கொட்ட கால்பதிக்கும் கேரளா !
author img

By

Published : Aug 5, 2019, 5:37 PM IST

Updated : Aug 5, 2019, 7:11 PM IST

கேரளாவிலிருந்து எடுத்து வரப்படும் மருத்துவக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள் இரவு நேரங்களில் தமிழ்நாடு எல்லைகளிலும், குடியிருப்புப் பகுதிகளின் அருகிலும் கொட்டப்படுவது அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தின் போத்தனூர் பகுதியில் சில வாரங்களாகவே கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவம், நெகிழிக் கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில், இரவு நேரங்களில் போத்தனூர் காவல் துறையினர் அப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று இரவு கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து மருத்துவக் கழிவுகளையும் நெகிழிக் கழிவுகளையும் ஏற்றுக்கொண்டு பிள்ளையார்புரம் அருகே வந்த இரண்டு லாரிகளை காவல் துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது கழிவுகள் இருந்ததை உறுதி செய்ய காவல் துறையினர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு எல்லைகளில் கழிவுகளை கொட்ட கால்பதிக்கும் கேரளா !

காவல் துறையினரின் விசாரணையில் ஒட்டுநர்களில் ஒருவர் கர்நாட மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்றும் மற்றொருவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வடிவேல் என்றும் தெரியவந்தது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கே அனுப்பப்பட உள்ளதாகத் தெரிகிறது.

Intro:தமிழக எல்லைகளில் கொட்ட கேரளாவிலிருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. Body:

கேரளாவில் இருந்து எடுத்து வரப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இரவு நேரங்களில் தமிழக நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கொட்டி செல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கோவை மதுக்கரை அருகேயுள்ள பிள்ளையார் புரம் அருகே கேரளா கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து இரவு நேரங்களில் போத்தனூர் போலிசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் , கண்ணாடி கழிவுகளை ஏற்றுக்கொண்டு பிள்ளையார் புரம் அருகே வந்த இரண்டு லாரிகளை போலிசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர் . அப்போது லாரியில் கழிவுகள் இருந்ததை உறுதி செய்ய போலிசார் லாரிகளை பறிமுதல் செய்தனர். கர்நாட மாநிலம் மைசூரை சேர்ந்த லாரி ஒட்டுநர் சிவக்குமார் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த ஓட்டுநர் வடிவேல் ஆகியோரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாசு கட்டுபாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவுகள் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது எங்கு கொட்ட வந்துள்ளனர். என்பது குறித்து விசாரிக்க உள்ளனர். விசாரணை முடிந்த பிறகு மீண்டும் கேரளாவிற்கே கழிவுகளை அனுப்ப உள்ளதாக தெரிகிறது.Conclusion:
Last Updated : Aug 5, 2019, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.