ETV Bharat / state

பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு - கோவை டிஐஜி

கோவை: பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி நரேந்திர நாயர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி
author img

By

Published : Mar 9, 2021, 6:32 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஐஜி நரேந்திர நாயர் கூறுகையில், " சிறந்த காவல் நிலையமாக பொள்ளாச்சியில் மேற்கு காவல் நிலையமும், தாலுகா காவல் நிலையமும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் காவல் நிலையங்களும், திருப்பூரில் தனி காவல் நிலையமும் சிறந்த காவல் நிலையங்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்தில் பதியப்படும் குற்ற வழக்குகள், பெண்களுக்கான எதிரான வழக்குகள், பிற்படுத்தப்பட்டோர் மீது பதியப்படும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன .

மேலும், கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு - கேரள எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருமாநில தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடப்பதால் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மத்திய அரசின் விரைவு படை வருவதால், தேர்தல் காலங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.