கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டி, சோலபாளையம் ஆகிய பகுதிகளில் பெடரல் வங்கியின் புதிய கிளை, ஏடிஎம் மையங்களை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.
அதன்பின் பின் அலுவலர்கள் பேசுகையில், இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் வசித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கிராமப்புற மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டு வருகின்றன.
பயிர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு, விவசாயக் கடன்கள், சிறு குறு கடன்கள், பல்வேறு திட்டங்கள் உள்ள நிலையில் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகள் பொதுமக்கள் நலன் கருதி அவர்களை முன்னேற்றுவதற்காக இந்த வங்கிகள் செயல்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பெடரல் வங்கி மண்டல மேலாளர் பெட்டி ஆண்டனி, வேளாண்துறை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கிளை மேலாளர்கள் சரவணன், பிரசாந்த், ஒன்றியக் குழு பெருந்தலைவர் விஜயராணி ரங்கசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.