ETV Bharat / state

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி கைதின் பின்னணி என்ன? - tiktok fame rowdy baby

சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசிய ரவுடி பேபி சூர்யாவை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ரவுடி பேபி
ரவுடி பேபி
author img

By

Published : Jan 4, 2022, 7:16 PM IST

Updated : Jan 4, 2022, 7:40 PM IST

கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி யூ-ட்யூப் சேனல் நடத்திவருகின்றனர். இவர்களது 10 வயது மகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து, காணொலியாக தனது யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்தக் காணொலிக்கு பின்னூட்டம் (கமெண்ட்) செய்த ரவுடி பேபி சூர்யா, அந்தக் குடும்பத்தை அவதூறான சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், தம்பதியின் செல்போன் எண்களை தனது எண் எனக் கூறி அந்தக் காணொலி கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார். இதனால் பலரும் அத்தம்பதியை அழைத்து, சூர்யா என நினைத்து மோசமான சொற்களால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி அதிரடி கைது

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அப்புகாரில் பேரில், மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் சிக்கா ஆகிய இருவரையும் இன்று (ஜனவரி 4) காலை கைதுசெய்தனர்.

பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், காணொலி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சூர்யாவை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: Rowdy Baby Surya Arrest: ரவுடி பேபி சூர்யா கைது

Last Updated : Jan 4, 2022, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.