ETV Bharat / state

கோவையில் 120 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்த கார்... 3 பேர் உயிரிழப்பு...

கோயம்புத்தூர் மாவட்டம் தென்னமநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் 120 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவையில் 120 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்த கார்

author img

By

Published : Sep 9, 2022, 10:42 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன் (18) தனது நண்பர்களுடன் நேற்று (செப் 8), சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் ஓணம் பண்டிகை கொண்டாடினார். அதன்பின் இன்று (செப் 9) அதிகாலை, மீண்டும் தென்னமநல்லூர் நோக்கி புறப்பட்டார். அப்போது கார் தென்னமநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து, மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்தது.

கோவையில் 120 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்த கார்

இதனிடையே காரை ஓட்டி வந்த ரோஷன் கிணற்றில் விழுவதற்கு முன், கதவை திறந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். அவருடன் பயணித்த நண்பர்கள் ஆதர்ஷ்(18), விவேக்பாபு(18), நந்தனன்(18) மூவரும் காருடன் மூழ்கினர். அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக அரசுப்பேருந்தில் பயணியை எட்டி உதைத்த நடத்துநர் - வைரலாகும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.