ETV Bharat / state

பொள்ளாச்சியில் 6.50 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது! - Coimbatore news today

Pollachi news: பொள்ளாச்சியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 6.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:34 AM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா, பான் மசாலா, போதை வஸ்துக்கள் ஆகியவற்றை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வால்பாறை மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகள் கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, கோவிந்தபுரம் பகுதிகளில் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி வால்பாறை சாலை, கோட்டூர் ரோடு மேம்பாலம் கீழ்பகுதிகளில் மூன்று நபர்கள் கையில் பேக்குடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து 6.50 கிலோ கஞ்சாவை கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தனிப்படை போலீசார் கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மூன்று பேரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா, திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கர், கேரளா மலப்புரத்தைச் சேர்ந்த பென்னில் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு 2.50 கிலோவும், மீதம் 4 கிலோ பேருந்து மூலம் கேரளாவுக்கு கடத்திச் செல்வதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, வால்பாறை பகுதியில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர், நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.