ETV Bharat / state

கோவைக்கு செம்மொழி பூங்கா, கலையரங்கம் தேவையா..? - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள்! - தமிழ்நாடு முதலமைச்சர

Coimbatore Municipal Corporation: கோவை மாநகராட்சி சார்பில் அமைய இருக்கும் செம்மொழி பூங்கா மற்றும் கலையரங்கம் தற்போது கோவை மக்களுக்கு தேவை இல்லை என்று வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Coimbatore Municipal Corporation
செம்மொழி பூங்கா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 7:54 PM IST

அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி, விக்டோரியா ஹாலில் மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டு தீர்மானம் போடப்பட்டது.

மேலும், சுமார் 47 ஏக்கரில், அமைய உள்ள செம்மொழி பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு ரூ.99.44 கோடியும், கோவை மாநகராட்சி உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செம்மொழி பூங்காவிற்கு குழாய் அமைக்க ரூ.7.83 கோடியும், செம்மொழி பூங்கா பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டுவதற்கு ரூ.25.56 கோடியும், மற்றும் கலையரங்கம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டுவதற்கு ரூ.6.38 கோடியும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வ.உ.சி பூங்கா வேண்டுமென வலியுறுத்தி, விக்டோரியா ஹால் முன்பு முழக்கங்களையும், "திமுக மேயரே கோவையின் அடையாளமான வ.உ.சி உயிரியல் பூங்கா வேண்டும்" என பதாகைகளை ஏந்திய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற அவசரக்கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது.
    1/4 pic.twitter.com/WJhdxRK3ta

    — Coimbatore Corporation (@CbeCorp) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், “செம்மொழி பூங்காவிற்கு ரூ.200 கோடி அறிவித்த நிலையில், தற்போது பூங்கா அமைக்க அவசரக்கதியில் தீர்மானத்தைக் கொண்டு வந்து அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.

ஏற்கனவே, பூங்கா இடங்களில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என தமிழகத்தில் அறிவிப்புகள் இருக்கின்ற நேரத்தில், கோவை மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க போகிறோம் என திமுகவினர் கூறுகின்றனர். தற்போது கோவை மக்களுக்கு இது தேவையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த 47 ஏக்கரில் கூட்டரங்கம் அமைப்பதற்குப் பதிலாக, உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கலாம். அதைவிடுத்து கூட்டரங்கம் அமைப்பது பணத்தை வீணடிக்கும் செயல். சென்னை வண்டலூருக்கு அடுத்தப்படியாக கோவையில் தான் வ.உ.சி உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த வ.உ.சி பூங்காவும் மூடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் செம்மொழி பூங்கா என்ற பெயரில் பார்க் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பூங்காவிற்கு பேரறிஞர் அண்ணா அல்லது அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்களை வைத்தால் அவர்களை கௌரவிப்பது போன்று இருக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டத்தின் மீது மரம் விழுந்ததில் 15 மாணவர்கள் பலத்த காயம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.