ETV Bharat / state

கோவையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு! வானுயரும் தமிழர் பெருமை!

Mudhumakkal thazhi in coimbatore: கோவை அருகே வீட்டில் தண்ணீர் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 2000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 12:22 PM IST

Updated : Sep 24, 2023, 2:57 PM IST

கோவையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

கோயம்புத்தூர்: சூலூர் அருகே உள்ள காளியாபுரத்தில் பொன்னுச்சாமி என்பவர் தனது நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (செப் 23) தண்ணீர் தொட்டி அமைக்கக் குழி தோண்டிய போது பழங்கால முதுமக்கள் தாழி போன்ற மண் பானை தெரிந்துள்ளது.

அந்த பானையின் மீது ஒரு பலகை வைத்து மூடப்பட்டிருந்த நிலையில் அதைத் திறந்து பார்த்த பொழுது அதில் சில எலும்புகள் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உடனடியாக இது பற்றி வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

கண்டெடுக்கப்பட்ட சிறு மண்பாண்டங்கள்
கண்டெடுக்கப்பட்ட சிறு மண்பாண்டங்கள்

2 ஆயிரம் ஆண்டு பழமை: தகவலின் பேரில் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், தொல்லியல் துறை அலுவலர் ஜெயப்பிரியா முன்னிலையில் குழி தோண்டும் பணி நடந்தது. அதில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி மற்றும் சிறு, சிறு மண் பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் தாழியில் இருந்த எலும்புகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறுகையில், "கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி, நான்கு அடி உயரம் உள்ளது. சிறு, சிறு மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானவை. அனைத்து பொருட்களும் கோவையில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ஆய்வுக்குப் பிறகே இந்த முதுமக்கள் தாழி எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பது தொடர்பான விவரங்கள் தெரியவரும். அருகாமையில் வேறு ஏதேனும் பழங்கால பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றனர். மேலும், அங்கு வந்த கோயம்புத்தூர் வருவாய் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் முதுமக்கள் தாழியை கைப்பற்றி விவரங்களைச் சேகரித்த பின் தொடர்ந்து ஆய்வுக்காக முதுமக்கள் தாழியைக் கோவையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.

தண்ணீர் தொட்டி பயன்பாட்டுக்குக் குழி தோண்டிய போது முதுமக்கள் தாலி கண்டுபிடிக்கப்பட்டது சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து முதுமக்கள் தாழியை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஆர்வத்துதுடன் பார்த்துச் சென்றனர்.

மறைந்து கிடக்கும் பொக்கிஷங்கள்: இதைபோல கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் கழிவு நீர் தொட்டி அமைக்கும் பணியில் போது பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலை பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் போது அதிக படியான பானைகள் மன்னில் புதைந்து காணப்பட்டுள்ளன. இதனைச் சென்னையைச் சேர்ந்த தொல்லியல் துறை மாணவர் கண்டுபிடித்தார்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளாக இருக்க கூடும் எனவும் உடனடியாக அப்பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மூன்று இடங்களில் முதுமக்கள் தாழி கிடைத்து இருப்பது வரலாற்றில் தமிழர்களின் தொன்மை குறித்த பெருமை கூறும் வகையில் அமைந்து உள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு! கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது கிடைத்த பொக்கிஷம்!

Last Updated : Sep 24, 2023, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.