கோவிட்- 19 தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள், சந்தைகள் ஆகியவற்றை மூடவேண்டும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றன.
அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியடுத்துள்ள திப்பம்பட்டியில் வியாழக்கிழமை கூடும் மாட்டுச்சந்தை இயங்க தடை விதித்து கோவை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்தச் சந்தைக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வருவார்கள். இந்தத் தடை உத்தரவால் நேற்று சந்தைக்கு வெளிமாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்கவோ விற்கவோ வரவில்லை.
இந்த தடை மார்ச் 31 வரை இருப்பதால் மாட்டு வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர்கள் என்றும் விவசாயிகள், வியாபாரிகள் கையில் பணப்புழக்கம் இருக்காது என்றும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இந்தப் பேரிடரைச் சமாளிக்க முடியும்'