கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் முன்பு உபயோகிக்கப்பட்ட ஓரிரு அரசு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக அவ்வாகனங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சில சமயங்களில் அவ்வாகனங்களுக்கு அடியிலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்குள் புகுந்து விடுகின்றன. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன.
இந்நிலையில், இன்று காலை அந்த வாகனங்களுக்கு மேல், அருகில், வாகனங்களுக்குள் என எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்கள், ஆணுறை பெட்டி என கிடந்துள்ளது. இது காண்போரை முகம் சுழிக்க வைத்ததோடு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மதுபாட்டில்கள் ஆணுறை பெட்டிகள் கிடப்பது அங்கு பணிபுரிவோர் மற்றும் அங்கு வரும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு.. இலவச மின்சாரம் ரத்தா? - அமைச்சர் விளக்கம்