கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த அய்யர்பாடி வில்லோனி எஸ்டேட்டில், ஒருவாரத்திற்கு முன்பு காட்டெருமை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. காட்டெருமை எவ்வாறு இறந்தது எனக் கண்டறிய வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். அதில் புலி நடந்து செல்லவது பதிவாகியிருந்தது தெரியவந்தது. இப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
![புலி நடமாட்டம் வனத்துறை கேமராவில் சிக்கியது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3676590_tiger.jpg)
இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்புகாக வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.